News and Events‎ > ‎

பிரியாவிடை நிகழ்வு - திரு. எஸ். புவனேந்திரன்

posted Jul 7, 2009, 2:57 PM by Prasath Mendis Appu
திரு. எஸ். புவனேந்திரனுக்கு காரைதீவு விவேகானந்தா விளையாட்டக் கழகம் மற்றம் விவேகானந்தா இலவசக்கல்வி சமூகவள நிலைய ஆசிரிய, மாணவர்களினால் பிரியாவிடை நிகழ்வு காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

இலவசக்கல்வி சமூகவள நிலையத் தலைவர் திரு. மு. ரமணீதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நிறுவனத்தின் போசகர்களில் ஒருவரான திரு. கே.வி.பரநிருபசிங்கம், கண்ணகி சனசமூக நிலையத் தலைவர் திரு. வி.குலேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், தரம் - 09, 11ம் ஆண்டுகளில் கல்விபயிலும் மாணவர்கள், பெற்றார் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

 திரு. எஸ். புவனேந்திரன் அவர்கள் இலங்கை கல்வி நிருவாகசேவையில் உள்ளீர்க்கப்பட்டு செல்வதையிட்டு இந் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் திறந்த போட்டிப்பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டுள்ள மூவரில் அம்பாரை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொருவரும் ஆக இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 இந் நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர், போசகர், கண்ணகி சனசமூக நிலையத்தின் தலைவர் மற்றும் போசகர், பெற்றார் குழு உறுப்பினர், தரம் 09 மானவ மாணவியர்கள் சிறப்பரையாற்றினர்.

2006ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலவசக்கல்வி நிலையத்தில் கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றி சிறந்த சேவையினை இந் நிலையத்திற்கு வழங்கியதையிட்டு இந் நிலைய உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய மாணவர்கள் அவருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர். விஞ்ஞானப் பட்டதாரியாகிய இவர் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி ஆசிரியராகக் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments